Perambalur: Guru Puja for Sundaramoorthy Nayanar at the Shiva Temple!

பெரம்பலூர் கடைவீதி முன்பு உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுந்தரமூர்த்தி நாயனமாருக்கு குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அனைத்து நாயன்மார்களுக்கும், உற்சவர் மற்றும் மூலவர்களுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னாள் அறங்காவலர் தெ.பெ. வைத்தீஸ்வரன், ராஜமாணிக்கம், மகேஸ்வரன் பழனியப்பன், திருஞானம், சங்கர், தின, வார வழிபாட்டு சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஈசன் அருள் பெற்றனர். பெரம்பலூர் நகர பிராமணர் சங்கம் சார்பில் நிகழச்சி உபாயம் செய்யப்பட்டிருந்தது. பூஜைகளை முல்லை மற்றும் கவுரி சங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!