18 MLAs will be disqualified, court ruling; Celebration of fire crackers at Namakkal AIADMK
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து நாமக்கல்லில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பதினெட்டு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சட்டப்படியானதே என்றும் நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளித்தார். இதனையடுத்து நாமக்கல்லில் அதிமுகவினர் நாமக்கல்லில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு நாமக்கல் தொகுதி செயலாளர் சேகர் தலைமை வகித்தார். நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன் முன்னிலை வகித்தார். இதில் நாமக்கல் மணிக்கூண்டு பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் கண்ணன், நாமக்கல் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பொரி சண்முகம்,மாவட்ட சிறுபான்மை நல பிரிவு இணை செயலாளர் சாதிக்பாஷா, நகர செயலாளர் ராஜா,துணை செயலாளர்கள் நரசிம்மன்,சன்பாலு,நகர பொருளாளர் ராஜா, நாமக்கல் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் புவனேஸ்வரன், தேவராஜன், சம்பத், வகுரம்பட்டி பிஏசிபி இயக்குநர் கலைச்செல்வன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.