நாளை ஏப்.22 ம் தேதி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்:
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு:
பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் நாம் தமிழர் கட்சி நெ.அருண்குமார், அம்மாபாளையம் களரம்பட்டி, செட்டிகுளம் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
இதே போல, குன்னம் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் மேலமாத்தூரில் பிரச்சார திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
தே.மு.தி.க கட்சியினர் கூட்டம்
பெரம்பலூர் தொகுதி தேமுதிக கட்சியினரின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் காலை 10 மணி அளவில் கர்ணம் சுப்ரமணியம் திருமண மண்டபத்தில நடக்கிறது.
கோடை திருவிழாக்கள்:
பிலிமிசை கிராமத்தில் கிராமத்தில் உள்ள எமாபுரி கோவில் திருவிழா மற்றும் கரகாட்டம் நடக்கிறது.
கை.களத்தூர் – பாதங்கி கிராமத்தில் சித்ரா பவுர்ணமியை (சித்திரை முழுநிலவு) முன்னிட்டு அன்னக்கொடி நிகழ்ச்சி நடக்கிறது.
நெற்குணம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா நடக்கிறது.
நெய்க்குப்பை கிராமத்தில் விநாயகர் கோவில் விழாவை முன்னிட்டு மாவிளக்கு பூஜை, மற்றும் இரவு தெருக்கூத்து நடக்கிறது.