2nd python in riverine villages around Perambalur: Fire department caught and handed over to forest department!


பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமம், தெற்குகாடு பானுசாமிக்கு சொந்தமான மக்காச் சோள வயலில் மலைப்பாம்பு உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு , நிலைய அலுவலர் ந. உதயகுமார்மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட வீரர்கள் சென்றனர். அங்கு வயலில் இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர், அதனை வனக்காவலர் செல்வக்குமாரியிடம் ஒப்படைத்தனர்.

நேற்று பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி பெரிய ஏரியில் இருந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 2வது நாளாக மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதால் கடந்த முறை மழையில் ஆற்று தண்ணீரில் அடித்து வந்திருக்கலாம். எனவே, கோனேரி ஆற்று கரையோரம் இருக்கும் விவசாயிகள் வயலுக்கு செல்லும் போதும், கால்நடை வளர்ப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!