30 thousand postcards to the President requesting the Cauvery Management Board: Namakkal DMK East arranged
நாமக்கல்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 30 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் மூலம் ஜனாபதிக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும் மிகவும் முக்கிய நதியாக உள்ள காவிரி ஆற்றில் குடிநீர் இல்லாமல் வறண்டுள்ளதால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இந்திய ஜனாதிபதியை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட திமுக கழகம் சார்பில் 30 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் மூலம் கோரிக்கை அனுப்பப்பட உள்ளது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோவன் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நாமக்கல் நகரத்தில் நகர பொறுப்புக்குழு, வார்டு செயலாளர்கள் வசம் அஞ்சல் அட்டைகள் ஒப்படைக்கப்பட்டு நகரம் முழுவதும் விநியோகிக்க படுகிறது. பின்னர் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கையொப்பமிட்டு இந்த அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்கள்.
நாமக்கல் நகர பொறுப்பாளர் மணிமாறன், உறுப்பினர்கள் சரவணன், ஈஸ்வரன், பூபதி, குட்டி (எ) செல்வகுமார், வார்டு செயலாளர்கள் அருள்செல்வன், சரவணன், பாஸ்கர், செவ்வேல், நகர மாணவரணி அமைப்பாளர் சுரேஷ்குமார், வார்டு பிரதிநிதி பாலகிருஷ்ணன், ஆனந்த், செல்லகுமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.