3rd day mandal puja at Poolampadi Tirupati Amman Temple: KMDK General Secretary E.R. Eswaran MLA, Sami Darshan!
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூரில், கடந்த 6ம் தேதி டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் குடமுழுக்கு நடத்தப்பட்ட தர்மராஜா -திரவுபதி அம்மன் கோவிலில் 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் சிறப்புமாக பூஜை நடத்தப்பட்டு வருகிறது. டத்தோ. பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற 3ம் நாள் மண்டல பூஜையில் திருச்செங்கோடு எம்.எல்.ஏவும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளருமான ஈ.ஆர். ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக மண்டல பூஜையில் கலந்து கொண்டு வழிபாட்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மண்டல பூஜையில் ஸ்ரீதிரௌபதி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து மஹா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 500 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ. பிரகதீஸ்குமார், கோவில் அறக்கட்டளை தலைவர் சூரியபிரகாசம், அறக்கட்டளை நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், ராமராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, விஜபி ராஜா, ஈஸ்வரன், இசைபாலு, திருச்செங்கோடு வேல்முருகன், தொழிலதிபர் மலேசியா வாசு, மலேசிய ராஜன், டத்தோ பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றத்தை சார்ந்தசதீஷ், மோகன்ராஜ், மணி, பத்திரம்சிவா, மாணிக்கம், ராமதாஸ், பாலகிருஷ்ணண், ரமேஸ், மது, மங்களத்தார்மணி, ராகுல், ரஞ்சித், ரவி, பாலுச்சாமி, துரை சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.