5-year-old daughter’s in Perambalur sexual distrub and the father of 7-year prison sentence Mahila Court
பெரம்பலூர்: 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் எஸ்.எல்.ஆர் காலனியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 35) கூலித் தொழிலாளி, இவர் கடந்த 2015 ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவரது 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை கவனித்த சுதாகர் மனைவி புஷ்பராணி(வயது 28) பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவில், 5வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை சுதாகருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் தீர்ப்பு கூறி விதித்தார். சுதாகர் சிறையில் அடைக்கப்பட்டார்.