75th Independence Day celebrations in Perambalur: Collector hoists national flag in honor!
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், இன்று காலை மாவட்ட விளையாட்ட அரங்கில், நாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய அவர், பின்னர், போலீசாரின் அணிவகுப்பு ஏற்றுக் கொண்டார். பின்னர், அரசு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீடுகளுக்கு சென்று வருவாய் துறையினர் மரியாதை செலுத்தினர். அவரது வாரிசுகளுக்கும் பெரம்பலூர் விழா மைதானத்தில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இதில் வருவாய் மற்றும் காவல் துறை உள்ளிடட அனைத்து துறையினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.