80 per cent of the funds coming to the local bodies belong to the central government: BJP state leader Annamalai interview!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் சிறப்புரையாற்ற பெரம்பலூருக்கு வந்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி;

என் மீது திமுக தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு என்ன என முழுமையாக தெரியவில்லை, அது குறித்து நோட்டீஸ் வரட்டும் பார்க்கலாம். திமுக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ள பல மசோதாக்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு கொண்டு வரவில்லை. கட்சி மற்றும் கட்சியினரின் நலனுக்காக அந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நீட், கூட்டுறவு சங்கம், யூ.ஜி.சி தொடர்பான மசோதாக்களுக்கு ஆளுநருக்கு பல விளக்கங்கள் தேவைப்படுகிறது. அதனால், அவை ஆளுநரின் பரீசீலனையில் உள்ளன.

குடியரசு தலைவராக தமிழர் ஒருவர் வந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை. ஆனால், அதுகுறித்து கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்து அறிவிக்க வேண்டும். குடியரசு தலைவர் தேர்வு விவகாரத்தில் கட்சியின் முடிவுக்கு நாங்கள் முழுமையாக கட்டுப்படுவோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரக்கூடிய நிதியில் 80 சதவீதம் மத்திய அரசு நிதி. அதை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிகள் மிகச்சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம்.

ரஷ்ய உக்ரேன் போர் காரணமாக சரவ்தேச சந்தையில் விலை உயர்வு உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணத்தால் பெட்ரோலிய பொருட்கள் விலை ஏறியுள்ளது. வரும்காலத்தில் பெட்ரோல், எரிவாயு பொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.நிச்சயம் பெட்ரோலிய விலை குறையும்’ இவ்வாறு தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!