8th grade common exam: tanittervarkal score for the certificates to the students to provide a temporary extension of the time period
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 2016 -ல் நடைபெற்ற எட்டாம் வகுப்பு பொதுத் தர்வை, தனித் தேர்வர்களாக தேர;வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் 23.09.2016 வரை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் 27.09.2016 முதல் 08.10.2016 வரை பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பதிவுகள் நடைபெற இருப்பதால் பத்தாம்வகுப்பு செய்முறைத் தேர்விற்கு பதிவு செய்யும் தேர்வர்களின் நலன்கருதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் 08.10.2016 வரை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.