9 arrested for case of stealing goods worth Rs 10 lakh near in kunnam at Perambalur District
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 9 பேரை குன்னம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வெண்மணி கிராமத்தில், அரியலூர் – திட்டக்குடி செல்லும் சாலையில் உள்ள நல்லப்படையான் தோப்பு என்னும் இடத்தில் புதியதாக அமைய உள்ள துணை மின் நிலையத்தில் பணிக்காக வைத்திருந்த பொருட்களில் 2000 மீட்டர் காப்பர் கேபிள், அலுமினியம் பஸ் பார் 27 ஜோடிகள் என சுமார் 10 லட்சம் மதிப்புள்ள மின் பொருட்களை காணவில்லை கடந்த 12.04.2022-ம் தேதி சென்னையைச் சேர்ந்த அம்மையப்பன் மகன் லெட்சுமணன் என்பவர் கொடுத்த புகாரின் வழக்குப் பதிவு செய்த பெற்று குன்னம் போலீசார் தேடி வந்தனர்.
மின் பொருட்களை திருடியவர்களை தேடி வந்த நிலையில்,
பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு காந்தி நகரை சேர்ந்த செந்தில் மகன் சுப்ரமணி 23. குருசாமி மகன் பாண்டியன் 49. வேலு மகன் பூபதி 24. முருகேசன் மகன் கருப்பையா 34. மற்றும் அத்தியூரை சேர்ந்த ராஜலிங்கம் மகன் பெரியசாமி (28), ராஜலிங்கம் மகன் சரவணன் 26. சரவணின் மனைவி திவ்யா 19 ஆகியோரை பொருட்களை களவாடிய குற்றத்திற்காகவும்,
திருட்டு பொருட்களை வாங்கிய குற்றத்திற்காக செஞ்சேரியை சேர்ந்த குழந்தைவேல் மகன் அன்பரசன் 46. வேப்பூரை நகரை சேர்ந்த நவாப்ஜான் மகன் அப்துல் கபூர் 44 ஆக மொத்தம் 9 நபர்களையும் கைது செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து ரூ. 52 ஆயிரம் மதிப்புள்ள மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக குன்னம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கொள்ளையர்களை போலீசார் எப்படி அடையாளம் கண்டனர், எங்கு பிடித்தனர் என்ற விவரங்களை குறிப்பிடவில்லை.