A special welfare camp was held on behalf of the Labbaikudikadu Government Higher Secondary School NSS Students

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கீழக்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

நலமான இளைஞன் வளமான பாரதம் என்ற கொள்கையின் கீழ் முகாம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முகாமிறகு தலைமை தாங்கி, மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

லப்பைக்குடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலியமுர்த்தி , வேப்பூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், பெண்ணக்கோணம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்ரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நக்கீரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டதாரி ஆசிரியர் சுந்தரபாண்டியன் அனைவரையும் வரவேற்றார். முகாம் அலுவலர் அருண் அறிக்கை வாசித்தார் ஹாஜி அப்துல்லா மெட்ரிக் பள்ளி தாளாளர் ஷாஜஹான்ஷா மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, மரக்கன்றுகள் நடும் விழாலை தொடக்கி வைத்தார்.

லப்பைக்குடிக்காடு அரசு மருத்துவமனை, கால்நடை மருந்தகம் மற்றும் தெருக்கள், கோயில்களில் தூய்மை பணிகள் நடைபெற்றன. முடிவில் கணினி ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!