A TV personality simultaneously says that the bus has a hole in it and that it won an award: Transport Minister Sivashankar is upset at a meeting of government engineers!
பெரம்பலூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு மாநாடு தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:
இப்படி இருக்கிற இந்த உலகத்துல இப்படி எல்லாம் நடக்குமா என்று ஓட்டை உடைசல் பெயர்களை வைத்துக் கொண்டு 19 அவார்டுகளை பெற்றது என்று செய்தி போடுறான். ஒரு பஸ் எங்கேயோ ஸ்டார்ட் ஆகலை! இந்த பஸ் பத்து பேரு தள்ளுகிறாங்க, அந்தக் காட்சியை முதன்மை படுத்தி போட்டு, இந்த 19 அவார்ட் வாங்கிய செய்தியை இதையும் அதுல போடுறான்.. இத்தனை பேருடைய உழைப்பு இதற்குத்தான் டெல்லியில் அவார்ட் வாங்க முடிகிறது என்று இல்லாமல்.. உழைப்பவர்களை கேவலப்படுத்தும் அந்த செய்திகள் எல்லாம் நான் கண்டித்துக் கொண்டிருக்கிறேன்…
நான் ஒவ்வொரு இடத்தினுடைய உழைப்பையும் உணர்ந்த காரணத்தினால் தான் பேசுகிறேன்.. உணர்வோடு பேசுகிறேன். அதேபோல நான் பெறுகின்ற பாராட்டுக்கு பின்புலமாக நீங்க தான் இருக்கிறீர்கள்.. நுணுக்கமாக ஒரு செய்தியை சொல்கிறேன்.. தீபாவளி பொங்கலுக்கு எப்படி நீங்கள் வீட்டுக்கு போவதில்லையோ, அது போல் நானும் போவதில்லை. . சென்னையில் தான் இருப்பேன். பொங்கலன்று வாழ்த்து தெரிவிக்க முதலமைச்சரை பார்த்து வாழ்த்து தெரிவிக்க போனேன் ஒரு பெரிய கூட்டம் 2 மணி நேரம் நின்று கொண்டிருந்தது அவர் கிட்ட போன உடனே வாழ்த்து தெரிவித்து நகர உயர்ந்தேன் என்னை நிறுத்திய முதலமைச்சர் ஊருக்கு போனவர்கள் எல்லாம் சிறப்பாக சென்று முடித்து விட்டார்கள் என்று என்னை பாராட்டினார். அதேபோல ரிட்டன் வரும்போதும் எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என பாராட்டி தெரிவித்தார். முதல்வர் ஒவ்வொரு துறையும் எவ்வளவு அக்கறையோடு கவனித்துப் பார்க்கிறார். அதை எப்படி பிரதிபலிக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். .
இந்த பட்ஜெட்டில், கடந்த காலத்தை விட கூடுதலாக நிதி கிடைத்துள்ளது. போக்குவரத்துறையில் பல மறுமலர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. மினி பஸ் வருகிறது, சிஎன்ஜி பஸ் வருகிறது, நமது முதலமைச்சர் புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார். 2000 கோடி ரூபாய் இந்த இந்தத் துறைக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதை வளர்வதை பார்க்கலாம். மீண்டும் சீரமைத்து கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்கள். புதிய பொறியாளர்கள் பணி நியமனம் குறித்தும் தொடங்கி உள்ளது உங்களுக்கு தெரியும், என்றும், போக்குவரத்து கழகத்தில் மக்களுக்காக அயராது உழைத்து நற்பணி ஆற்றும் பொறியாளர்களின் கோரிக்கைகளை அரசு விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் என்றும் என பேசினார்.
பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், கும்பகோணம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.பொன்முடி விழுப்புரம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் குணசேகரன், போக்குவரத்து துறை அமைச்சர் சிறப்பு நேர்முக உதவியாளர் ஞானசம்பந்தம், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பொது மேலாளர், திருச்சி மண்டலம் போக்குவரத்து கழக பொது மேலாளர், போக்குவரத்து கழக அலுவலர் சங்க பொதுச் செயலாளர் செல்வகுமார் ,
தலைவர் ரவி, பொருளாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொறியாளர் ராஜ்மோகன் வரவேற்றார். பொறியாளர் சங்க செயலாளர் பாலாஜி (மாநகர போக்குவரத்து கழகம்), சங்க தலைவர் குமரேசன், சங்க செயலாளர் கார்த்திகேயன், ஆகியோர் பொறியாளர்களின் கோரிக்கையாக பொறியாளர்களுக்கு உரிய காலத்திற்கு பதவி உயர்வு தருதல், காலி பணியிடங்களை நிரப்புதல் 7 ஆண்டுகளுக்கு முன்பு பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து பின்பு நிறுத்தி வைக்கப்பட்ட பொறியாளர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வந்த ஊக்க தொகையினை மீண்டும் வழங்குதல் போன்றவற்றை பொறியாளர்களின் கோரிக்கை மனுவாக அமைச்சரிடம் வழங்கினர். மாநகரப் போக்குவரத்து கழக பொறியாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.