Abdul Kalam Birthday Celebration: Science Exhibition in Namakkal
நாமக்கல்லில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினத்தை இளைஞர்கள் எழுச்சி தினமாக கடந்த 2015ம் ஆண்டு முதல் கொண்டாபட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றம் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.
இக்கண்காட்சியை முதன்மை கல்வி அலுவலர் உஷா துவக்கிவைத்தார். கண்காட்சியில் நிலநடுக்க எச்சரிக்கை மணி, ஹைட்ரஜன் எரிபொருள், தானியங்கி தொலைபேசி கண்டுபிடிப்பு, ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை, எண்ணியல் அடிப்படை கொள்கை, காதுகேளாதோர் பாட்டு கேட்கும் கருவி ஆகியவற்றை மாணவர்கள் செய்து காட்சிக்காக வைத்திருந்தனர்.
மேலும், அறிவியல் தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்நத 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.