Accredited Hospitals for Chief Minister’s Insurance Scheme for Corona Infection Treatment: Perambalur Collector!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனலெட்சுமி சீனிவாசன் மருத்து வனை, லட்சுமி மருத்துவ மனை, அற்புதா மருத்துவ மனை, நிரஞ்சன் மருத்துவ மனை, எஸ்.பி.டி. மருத்துவ மனை, சஞ்சீவ் மருத்துவ மனை, எஸ்.கே.எஸ். மருத்துவ மனை போன்ற 7 மருத்துவ மனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மவாட்டத்தில் தனியார் மருத்துவ மனைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய் தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணத்தை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (அரசு பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும்) மூலம் அரசு வழங்கி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மிக அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளுக்கிடையே கட்டண வேறுபாடுகள் அதிகமாக இருப்பதாக வரப்பெற்ற புகார்களை தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணத்தை முறைப்படுத்தி ஆணையிட்டுள்ளார்கள்.
தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அட்டை பெற்றுள்ளவர்கள் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
தீவிரமல்லாத கோவிட்-19 சிகிச்சை ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் பழைய கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.5000, புதிய கட்டணம் (ரூ) நாள் ஒன்றுக்கு ரூ.5000
தீவிரமல்லாத கோவிட்-19 சிகிச்சை ஆக்ஸிஜன் உதவியுடன் புதிய கட்டணம் ரூ,15,000, தீவிர சிகிச்சை வெண்டிலேட்டர் வசதியுடன் பழைய கட்டணம் ரூ.14000 -15000 புதிய கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.35,000, தீவிர சிகிச்சை ஊடுருவா வெண்டிலேட்டர் வசதியுடன் ரூ.10000 -11,000 புதிய கட்டணம் ரூ.30000,
தீவிர சிகிச்சை ஆக்ஸிஜன் உதவியுடன் வெண்டிலேட்டரிலிருந்து படிப்படியாக குறைப்பதற்கு ரூ. 25,000.
எனவே, அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மேற்குறிப்பிட்ட தமிழ்நாடு அரசின் பரிந்துரையின்படி, கொரோனா சிகிச்சை கட்டணத்தினை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அதற்குமேல் கூடுதலாக சிகிச்சை பெறுபவர்களிடமிருந்து கட்டணம் பெறக்கூடாது. இதுகுறித்து ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 18004253993 அல்லது 104 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.