Adding the name of the electoral list, deletion, Address Edit Camp:Perambalur Collector glance
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் 01.09.2018 முதல் 31.10.2018 வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது. அதன்படி இன்று (09.09.18) ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இரூர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குசாவடிகளிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்களை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.
மேலும் இச்சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6-ம், பெயர் நீக்கலுக்கு படிவம் 7-ம், திருத்தம் மேற்கொள்வதற்கு படிவம் 8-ம், முகவரி மாற்றம் (ஒரே சட்டமன்ற தொகுதிக்குள்) படிவம் 8 ஏ-ம், பொதுமக்களால் உரிய ஆவணங்களுடன் அளிக்கப்பட்டு வருகின்றது.
எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 01.01.2019 அன்று 18 வயது பூர;த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களையும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்காக இது போன்ற சிறப்பு முகாம்களிலும், ஏனைய நாட்களில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அலுவலக வேலை நேரங்களிலும் பொதுமக்கள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் ஷாஜஹான் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.