பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச சட்ட ஆலோசனை முகாம் இன்று நடந்ததது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த இலவச சட்ட ஆலோசனை முகாமிற்கு அரசு தலைமை வழக்குரைஞர் குலோத்துங்கன் தலைமை வகித்தார்.
அரசு வழக்குரைஞர்கள் பழனிவேலு, கணேசன், பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அக்கட்சியின் மாவட்ட செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன் துவக்கி வைத்த முகாமில், வழக்கறிஞர்கள் பிச்சைபிள்ளை, ராமசாமி, கார்த்திக், பாலமுருகன், சின்னப்பா, செந்தில், சேதுபதி, வினோத், கனகராஜ், இளவரசன் ஆகியோர் சட்ட ஆலோசனைகள் வழங்கினர்.
முகாமில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தங்களது பிரச்னைக்களை நீதிமன்றம் அல்லது சமரச தீர்வு காண்பது குறித்து கேட்டறிந்தனர்.
இதில், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அ. அருணாசலம், முன்னாள் மாவட்ட செயலர் மா. ரவிச்சந்திரன், நகராட்சித் தலைவர் சி. ரமேஷ், ஒன்றியக் குழுத் தலைவர் து. ஜெயக்குமார், ஒன்றிய செயலர்கள் என்.கே. கர்ணன், ப. கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், கவுள்பாளையம் ஊராட்சித் தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.