AIADMK protests in Perambalur against DMK Youth Wing Secretary Udayanithi Stalin!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு, அரசியல் லாபத்திற்காக தொடர்ந்து பெண்களை இழிவாக பேசியும், முதல்வர் மீதும் அவதூறு பரப்பி வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாவட்ட அதிமுக சார்பில் நடந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், குன்னம் எம்எல்ஏமான ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:

மக்களின் பிரதிநிதியான தமிழ்நாடு முதலமைச்சரை, திமுக கட்சியின் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் வயது வித்தியாசம் இல்லாமலும், மக்கள் தேர்ந்துதெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வரை எந்த வித வித அரசியல் நாகரீகம் இல்லாமல் தொடர்ந்து பேசிவருவதை கண்டிப்பதுடன், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா யார் காலில் விழுந்து பதவிகள் பெற்றார் என்பதையும், கருணாநிதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் பதவி பெற்றதையும் விவரிக்க வேண்டும். அ அமைச்சர் ஆ.ராசா தலைவராக கருதும் மு.க.ஸ்டாலினை 4 வரிகள் எழுதி கொடுத்து படிக்க சொல்லி காட்ட வேண்டும் என்றும் பேசினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், செல்வமணி ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வக்குமார், ரமேஷ், சந்திரகாசன், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, பேரூர் செயலாளர்கள் செல்வராஜ், வினோத், ரெங்கராஜ், ஆசாத் , மாவட்ட அணிச் செயலாளர்கள் லாடபுரம் கருணாநிதி, வீரபாண்டியன், டாக்டர்.ஆனந்தமூர்த்தி, வக்கீல் பாலமுருகன், ஜெமீன்ஆத்தூர் ஊராட்சித் தலைவருமான ஜி.சண்முகம், ஒன்றிப் பேரவை இணைச்செயலாளரும், கீழமாத்தூர் ஊராட்சித் தலைவருமான கே.பி.ராஜேந்திரன், ஒன்றியப் பேரவை இணைச் செயலாளரும், தொண்டப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான டி.செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், சாத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான சி.நாகராஜன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவரும், நிலவளவங்கி இயக்குனருமான என்.ராஜ்குமார், புஜங்கராயநல்லூர் எஸ்.செந்தில்குமார், ஊராட்சித் தலைவர்கள் சத்யாபன்னீர்செல்வம் (எசனை), கலையரசிரமேஷ் (கோனேரிப்பாளையம்) உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், மற்றும் மாநில,மாவட்ட பேரூர், கிளை கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் முன்னாள் யூனியன் சேர்மன் அன்னமங்கலம் ஜெயலட்சுமி, உட்பட ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இணைச் செயலாளர் ராணி வரவேற்றார். மகளிரணி செயலாளர் ராஜேஷ்வரி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!