AIDS, Dengue and Human Awareness Rally on behalf of Red Cross near Perambalur

பெரம்பலூர் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கிளை மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் இணைந்து நடத்திய எய்ட்ஸ்,டெங்கு மற்றும் மனித நேய விழிப்புணர்வு பேரணி செட்டிக்குளம் அரசு மேல் நிலைபள்ளியில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இப்பேரணியில் 800மாணவமாணவியர் கலந்து கொண்டனர்.

பேரணியினை பள்ளி தலைமையாசிரியர் பி. நாகமணி தலைமை வகித்தார். IRCS மாவட்ட கிளை கவுர செயலாளர் ந.ஜெயராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாவட்டக் கிளை கவுரவ பொருளாளர் மற்றும் JRC மாவட்டகன்வீனருமான வெ.இராதாகிருஷ்ணன் தலைமையில்செட்டிக்குளம் பத்திரபதிவுஅலுவலகம். தபால் அலுவலகவீதி கடைவீதி தெற்குவீதி மற்றும் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் பேரணி பள்ளியை சென்றடைந்தது.

பின்னர் நடைபெற்றஎய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கில் எய்ட்ஸ் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்டஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் சுமதிமற்றும் எய்ட்ஸ் மாநில கருத்தாளர் சி.பத்மாவதிஆகியோர் எய்ட்ஸ் நோய் ஏற்படுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பற்றியும் விளக்கிப் பேசினர்.

அதன் பின்னர் கட்டுரைமற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஜே.ஆர்.சி., மண்டலஅலுவலர்கள் மு.நவிராஜ், ஆர். செல்வக்குமார் மற்றும் ம.ஜோதிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சாரண உதவி செயலர் தனபால், மாவட்ட சாரணிய அமைப்பு ஆணையர் சரோஜா, பள்ளி பசுமைப் படைஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ப. ராமன் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் ஆகியோர் பேரணி மற்றும் கூட்டஏற்பாடுகளை செய்திருந்தனர்.

உதவித் தலைமையாசிரியர் செ.மணி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!