All exploitation must be eliminated; P. Sugandhi, General Secretary of the Mothers’ Union, speaks in the Arivom Marxism class!

பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில் அறிவோம் மார்க்சியம் தொடர் பயிற்சி வகுப்பு மார்ச் மாத நான்கு ஞாயிறுகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தி.க நகரத் தலைவர் அக்ரி.ஆறுமுகம் வரவேற்றார். லட்சுமி மருத்துவமனை நிர்வாகி ச.த.ஜெயலட்சுமி தலைமை வகித்து பேசும்போது பெண்களுக்கு முதலில் குடும்ப ஆதரவு குறைவாகி குடும்ப வன்முறை அதிகமாக உள்ளது. பெண் சமுதாயத்தை அடக்கி ஆள நினைக்கும் ஆண்வர்க்கத்தினர் அதிகளவில் உள்ளனர்.
ஆண் சமுதாய வளர்ச்சியின் அதிகளவில் பெண்கள் பங்கு தான் உள்ளது என்பதை ஆண் வர்க்கத்தினர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பெண்ணியமும் மார்க்சியமும் என்ற தலைப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் பி.சுகந்தி பேசியதாவது: இந்த சமூகம் ஆதிக்க சமூகம், தொழிலாளி வர்க்கம் -முதலாளி வர்க்கம், ஒருவரை இன்னொருவரை சுரண்டுகிற சமூகம், பெண் ஜனாதிபதியாக இருந்தாலும் தான் ஒரு பெண் என்ற மனப்பக்குவம் பெண்களுக்கு வந்து விடுகிறது, எனவே அனைத்து சுரண்டலும் நீக்கப்பட வேண்டும் என்பதே மார்க்சியம் சொல்லும் பெண்ணியம் என்று சிறப்புரை ஆற்றினார்.

மு.பெ.சத்தியநேசன் கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாள் மெட்ரிக்பள்ளி ஆசிரியர் திவ்யா நன்றி கூறினார். மதியம் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு தீ.ஒ. முண்ணனி மாவட்ட செயலாளர் எம்.கருணாநிதி வரவேற்றார். விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் வக்கீல் ஸ்டாலின் தலைமை வகித்தார். சாதியம் – மார்க்சிய அணுகுமுறை என்ற தலைப்பில் தமிழ்நாடு தீ.ஒ. முண்ணணி பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.முத்துக்குமார் நன்றி கூறினார். மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலாளர் சி.கருணாகரன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், தமுஎகச மாவட்ட செயலாளர் ப.செல்வகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சமூகநீதி படைப்பாளர் சங்க மாவட்ட செயலாளார் பா.வஸந்தன், அரசு பள்ளி முதுகலை தமிழாசிரியர் சி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!