All parties meeting on the ward draft resolution for local bodies
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டு மறுவரையறை கருத்துக்களை கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி இயக்குநர் (ஊராட்சி) அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது மற்றும் பேரூராட்சி எல்லை மறுவரையறை கருத்துரு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, அனைத்து கட்சி அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களுக்கான கருத்துகேட்பு மற்றும் ஆட்சேபனைகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
121 கிராம ஊராட்சியில் உள்ள 1,032 கிராம ஊராட்சி வார்டுகளில் 1,020 கிராம ஊராட்சி வார்டுகளை தவிர மீதம் 12 வார்டுகளில் மட்டுமே 2011 மக்கள் தொகை சராசரியினை அடிப்படையாகக்கொண்டு 25 சதவீத கூடுதல், குறைவு வார்டுகள் அமைக்கப்பட்டன.
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 300 கிராம ஊராட்சி வார்டுகளில் 2 வார்டுகளிலும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 183 கிராம ஊராட்சி வார்டுகளில் 2 கிராம ஊராட்சி வார்டுகளும்,
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 270 கிராம ஊராட்சி வார்டுகளில் 1 கிராம ஊராட்சி வார்டும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 279 கிராம ஊராட்சி வாh;டுகளில் 7 கிராம ஊராட்சி வார்டுகளும் ஆக மொத்தம் 12 கிராம ஊராட்சி வார்டுகள் விவரம் தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 76 ஊராட்சி ஒன்றியகுழு வார்டுகளில், 18 ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய வார்டில் 5 வார்டிலும், 14 பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய வார்டில் 3 வார்டுகளிலும், 23 வேப்பூர் ஊராட்சி ஒன்றிய வார்டில் 2 வார்டுகளிலும், 10 சதவீத கூடுதல் – குறைவு வார்டுகள் அமைக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டது.
8 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 8-ல் 10 சதவீத கூடுதல் – குறைவு வார்டுகள் ஏதும் இல்லை என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்) , இரா.தமிழ்ச்செல்வன் ( பெரம்பலூர்), மற்றும் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கே.புதூர் கிராம பொதுமக்கள் – , அசூர் , என்.செல்லப்பிள்ளை, கீழப்புலியூர்-பொதுமக்கள், அகரம்சீகூர் திருமாந்துறை, பெண்ணகோனம் கிளியூர் பொதுமக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்து பூர்வமாக மனு கொடுத்துள்ளனர். மற்ற இதர அரசியல் கட்சியினா; பிரமுகர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.