Amitysoft நிறுவனத்தின் 20-ம் ஆண்டு விழாவில் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா சென்னையில் விமர்சையாக நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் மற்றும் சாதனைபுரிந்தவர்களுக்கு பாராட்டு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய நிறுவனத்தின் தலைவர் திரு.ஜெயக்குமார், தாங்களது நிறுவனம் 20-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் தங்களின் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பலர் பன்னாடுகளில் பல்வேறு உயர்ந்த நிறுவனங்களில் பொறியாளர்களாக வலம் வருவதாகவும் கூறினார். தற்கால தொழில் நுட்பங்களை கருத்தில் கொண்டு தங்களது நிறுவனம் பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை கையாண்டு வருவதாகவும் கூறினார். விழாவுக்கு வருகை புரிந்த அனவருக்கும் பாராட்டுகளை தெரிவிக்கும் அதே வேளையில் தங்களுடன் தற்போதும் பல்வேறு தொழில்நுட்ப தொடர்புகளை கொண்டு பலர் சாதனைகளை புரிந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பாராட்டு பெற்ற பொறியாளர்கள் தங்களின் கடந்தகால தொழில் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொண்டனர்.