Amma Gymnasium and Park Opening Ceremony at Veppur near Perambalur
பெரம்பலூர் மாவட்ட, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வேப்பூர் ஒன்றியம், ஓலைப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பூரில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சிக்கூடம் மற்றும் அம்மா பூங்காவை, பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, ஆகியோர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேற்று திறந்து வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் வேப்பூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், நடைபயிற்சி மேற்கொள்ளவும், மேலும் அப்பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுவதற்கும் எழிலார்ந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், திரு.செந்தில், வட்டாட்சியர் சிவா, ஒப்பந்ததாரர் பேரளி துரைக்கண்ணு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.