An unidentified vehicle collided with a VCK near Perambalur. District organizer killed!
பெரம்பலூர், துறைமங்கலம் பகுதியை பூமாலை மகன் பூ.சினிவாசன் (வயது 40) இவர் பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இவர் நேற்று காலை 4.30 மணி அளவில் சென்னைக்கு பெரம்பலூரில் இருந்து ஸ்கூட்டரில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செங்குணம் பிரிவு சாலைக்கும் 4 ரோட்டிற்கு ம் இடையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் சீனிவாசன் சென்ற ஸ்கூட்டரில் மோதி ஏறியதில் சம்பவ இடத்திலேயே சீனிவாசன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் விபத்து மீட்பு படையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய சீனிவாசனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் மேலும் சீனிவாசன் மனைவி சித்ரா (வயது 37) கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சீனிவாசனுக்கு சின்னமணி, பூமணி என இரு மகன்கள் உள்ளனர்.