An unidentified vehicle collided with a youth who went to Chennai and died!
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், இருர் சர்வீஸ் ரோடு அருகே சென்னையை நோக்கி சென்ற பைக் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பைக்கை ஓட்டி வந்த நபர் தலையில் பலத்த காயமடைந்ததில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு, விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை நடத்தியதில், விபத்தில் பலியான வாலிபர், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள முஸ்லீம் நகர், நடுத் தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் ஜாவித் (வயது 32) என்பதும், சொந்த ஊரில், சென்னைக்கு வேலைக்காக பைக்கில் சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.