Anna 110th birthday public meeting: Tomorrow is going on in Perambalur. Welcome all! R.T.Ramachandran’s call
பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கை:
கழக நிரந்தர பொதுச் செயலாளர், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு தமிழக முதல்வரும், கழக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓபன்னீர்செல்வம், ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க, அண்ணாவின் 110வது பிறந்த நாள் விழா சிற்பாக கொண்டாடப்பட உள்ளது.
சிறப்புரை வழங்க வருகை தரும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், கழக அமைப்பு செயலாளரும் ,தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம், நாளை 16.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில், பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள வானாலித் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு வருகைத் தருவதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,சட்ட மன்ற உறுப்பினர், மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளும், மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும், மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள்,கழக தொண்டர்கள் என அனைவரும் வருகை தந்து ஆலோசனை கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.