Anti-Corruption Weekly pledge at Perambalur Collectorate office

பெரம்பலூர் : அக்டோபர் 30 முதல் நவம்பர் 4ம் தேதி வரை ஊழல் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் “நமது நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் முக்கியத் தடைகளில் ஒன்றாக இருப்பதாக நான் நம்புகிறேன். அரசு குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இவைகள் அனைத்தும் ஊழலை ஒழிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் விழிப்புணா;வோடும், நோ;மையுடனும், கண்ணியத்துடனும் ஊழலை ஒழிப்பதில் உயா;ந்த நோக்குடன் உறுதுணையாக விளங்க வேண்டும்.

அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன். லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன். அனைத்து செயல்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையுடனும் நடந்து கொள்வேன்.

பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன். தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன். ஊழல் தொடர்பான தகவல்களை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்ற உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!