மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் மே 16 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தலை அமைதியாகவும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழா வண்ணம் நேர்மையாகவும் தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
மேலும் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள. மேலும் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக 05.05.2016 முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் வாக்குச்சாவடி அலுவலர்களால் வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பூத் சிலிப்புகள் 11.05.16 வரை வினியோகிக்கப்பட்டது.
இந்த பூத் சிலுப்புகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை பயன்படுத்தி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலும். மேலும் பூத் சிலுப்புகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களான கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி அடையாள அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய), நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD), ஆதார் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளார்.