Ariyalur: Chetak electric scooters launch ceremony to replace petrol; Bajaj Bike Showroom Opening Ceremony!
வாகன விற்பனையில், அதிக மைலேஜ் தரும் பிளாட்டினா சிடி 100, பைக்குகளும், அதிக வேகமாக செல்லக்கூடிய பல்சர் டொமினார், என்.எஸ். மாடல் பைக்குகளையும் வெளியிட்டு இந்திய சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள பஜாஜ் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களையும், சி.என்.ஜி-யில் இயங்கும் வாகனங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
அரியலூருக்கான, பஜாஜ் விற்பனை ஷோரூம், அரியலூர்- ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டில் வாலாஜா நகரத்தில் இயங்கி வந்த லிங்கம் பஜாஜ் மோட்டார் சைக்கிள் ஷோரூமின் விரிவுபடுத்தப்பட்ட பிரமாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது. விழாவில் பஜாஜ் பல்சர் என் 250 மோட்டார் பைக்குகள் அறிமுக விழாவும் நடந்தது.
தற்போது, உலகம் முழுவதும் பெட்ரோலுக்கு மாற்றாகவும், சுற்றுச் சூழலை காக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர், பைக்குகள், கார்கள் அதிக அளவில் சந்தையில் போட்டி போட்டுக் கொண்டு விற்பனைக்கு வருகின்றன.
அதில், பழமையான பஜாஜ் ஸ்கூட்டர் கம்பனியும், தனது பங்கிற்கு சேட்டக் பிரிமியம், சேட்டக் அர்பன், பஜாஜ் புளூ என 3 வகையான புதிய இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இது நாள் வரை பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் சோதனை ஓட்டம் பெற்ற பஜாஜ் மின்சார ஸ்கூட்டர்கள் பழைய ஸ்கூட்டர்களை நினைவுப்படுத்தும் வகையில், அதே சேட்டாக் பெயரில் மெட்டல் பாடியில் உருவாக்கிய, பஜாஜ் சேட்டக் பிரிமியம், அர்பன், பஜாஜ் புளூ, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுக விழாவும் நடந்தது.
ஷோரூம் திறப்பு விழா சலுகையாக பஜாஜ் பல்சர் என் 250 மோட்டார் சைக்கிளுக்கு ரூ.3 ஆயிரமும், சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.20 ஆயிரமும் சலுகை அளிக்கப்படுகிறது, என லிங்கம் பஜாஜ் மேலாண் இயக்குனர் எல். வரதராஜன் தெரிவித்தார்.
இவ்விழாவில் ரெயின்போ ஹோண்டா அழகுதுரை, அகிலேஷ் அக்ரோ ஏஜென்சி பரமசிவம், லிங்கம் ஜவுளி ஸ்டோர் அசோக், பா.ஜனதா பிரமுகர் ஸ்ரீநந்தினி விக்னேஷ் வரன், யோகம் மோட்டார்ஸ் தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை ஷோரூமின் விற்பனை மேலாளர் அருணாதேவி, சர்வீஸ் மேலாளர் மணிகண்டன், கிளை மேலாளர் கோபிநாத் உள்ளிட்ட ஊழியர்கள் செய்திருந்தனர்.