Arumbavur suicide by drinking poison at the farmer.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 45). விவசாயி.
இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த குழந்தைசாமி பெரும்பாலான நேரங்களில் மது அருந்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை வரை வீட்டிற்கு வராததால் உறவினர்கள் குழந்தைசாமியை பல இங்களில் தேடினர்.
பின்னர் வயலுக்கு சென்று பார்த்தபோது மதுவுடன் புல், பூண்டுகளை அழிக்கும் களைக்கொல்லி ( விஷம் ) கலந்து குடித்துவிட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தைசாமியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.