Aswins provided a modern bicycle for the disabled athlete At the national level
பெரம்பலூரில் இருந்து, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து வரும் மாற்றுத்திறனாளி வீரருக்கு, அஸ்வின்ஸ் நிறுவனத்தின் சார்பில், நவீன சைக்கிளை அஸ்வின்ஸ் குழுமத் தலைவர் கே.ஆர்.வி.கணேசன் இன்று வழங்கி வாழ்த்தினார்.
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் கலைச்செல்வன். இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 200-க்கும் மேற்பட்ட மெடல் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றுள்ள இவர், அண்மையில் டெல்லியில் நடைப்பெற்ற பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான செலக்சனில் நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டார்.
பயிற்சி பெறுவதற்கும் பங்கேற்பதற்கும் நல்ல சைக்கிள் வேண்டும் என்றும், ஊரடங்கால் மேலும் சிரமத்தை சந்தித்த அவருக்கு யாரேனும் உதவி புரிந்தால் பயனுள்ளதாக இருக்கும் என விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் 21 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன சைக்கிள் ஒன்று வாங்கி, மாற்றுத்திறனாளி வீரர் கலைச்செல்வனுக்கு இலவசமாக வழங்கப்பபட்டது .அதனை பெற்றுக்கொண்ட கலைச்செல்வன், இந்த உதவி தனக்கு உத்வேகத்தை தரும் என்றும், நிச்சயம் வரும் காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பேன் என்றும் நிறுவனத்தாருக்கு நன்றியுடன் அப்போது தெரிவித்தார்.