At midnight near Perambalur attacked the farmers and looted jewelry money laundering Near in Perambalur
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 50). விவசாயியான இவர் ஊருக்கு அருகாமையில் உள்ள வயலில் குடும்பத்தினருடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சின்னதுரை நாய் குறைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்திருந்த 3 மர்ம நபர்கள் சின்னத்துரையை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் சின்னதுரை படுகாயம் அடைந்தார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த சின்னதுரையின் மனைவி கலைச்செல்வி(40), மகன் பூபதி(13) ஆகியோரையும் கிட்ட வந்தால் உங்களுக்கும் உருட்டுக்கட்டை அடிதான் என மிரட்டி வீட்டிற்குள் உட்கார வைத்தனர்.
பின்னர் கலைச்செல்வி அணிந்திருந்த அரை பவுன் தாலி, அரை பவுன் தோடு மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டனர். மேலும் வீட்டிலிருந்த 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர் படுகாயமடைந்த நிலையிலிருந்த சின்னத்துரையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.