
திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29), திருச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டையில் உள்ள அவரது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க வேண்டி அரசு பஸ்சில், சென்றுக் கொண்டிருந்தார். பேருந்து, பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே வந்து கொண்டிருந்த போது, அருகில் இருந்த பயணி மணிகண்டனின் சட்டைப்பையில் இருந்த செல்போன் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 3 1/2 பவுன் தங்கச் செயினை திருட முயன்ற போது சுதாரித்துக் கொண்டார். சக பயணிகள் உதவியுடன், பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், திருட முயற்சிததவன் சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த, முத்துக்கிருஷ்ணன் மகன் சரவணன் என்பது தெரிய வந்தது. கைது செய்த போலீசார் மேலும், அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.