Auto accident in the vicinity of the perambalur the 12 injured, including 7 women
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பெண்கள் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் முருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ஒரு லோடு ஆட்டோவில் இன்று கீழப்பெரம்பலூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிழுமத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அரசு மாதிரி பள்ளி அருகே ஆட்டோவில் ஏற்பட்ட பழுது காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த முருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி சல்சா (வயது 28), கண்ணன் மனைவி பூவாயி( 36), சின்னசாமி மனைவி செல்வாம்பாள் ( 50), மூக்கன் மனைவி தனம்(51), முத்துசாமி மனைவி மணிமேகலை (58), ராமமூர்த்தி மனைவி வசந்தா ( 30), செங்கமலை மனைவி ராஜேஷ்வரி ( 26) மற்றும் குமாரசாமி மகன் தங்கவேல் (65), ராமசாமி மகன் வீரமுத்து (38), சோலைமுத்து மகன் பெரியசாமி ( 59), பெரியசாமி மகன் செல்வராஜ் (40) ஆகியோர் உட்பட 12 பேர் படுகாயமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மங்கலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.