Avin contract truck owners protest in Perambalur to pay rent arrears!
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்திற்கு பால் ஏற்றி வரும் லாரி ஒப்பந்ததார்கள் நிலுவையில் உள்ள மூன்று மாத வாடகையை வழங்கக்கோரி இன்று பால் ஏற்றி மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த ஆவின் நிர்வாகம் அவர்களிடம் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் வழங்கப்படும் என தெரிவித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு ஓரிரு மணி நேரங்களில் மீண்டும் பால் எடுக்கும் பணிக்கு திரும்பினர்.