Awareness campaign ahead of Road Safety Month; Perambalur Collector started.


பெரம்பலூர் அண்ணா பேருந்து நிலையத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்தும், பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சாலை பாதுகாப்பு மாத விழா 18.01.2021 முதல் 17.02.2021 வரை “சாலை பாதுகாப்பு உயிh; பாதுகாப்பு” என்ற அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

18 வயதுக்கு குறைவானவர்களோ, ஓட்டுநர் உரிமம் இல்லாமலோ, தலைக்கவசம் அணியாமலோ மற்றும் முழு தகுதியில்லாத வாகனங்களையோ இயக்கக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து விபத்தில்லா தமிழக போக்குவரத்து என்ற நிலையை ஏற்படுத்துவதற்கு முன்வரவேண்டும். வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர்கள் விருப்பு, வெறுப்பிற்கு இடமளிக்காமல் முழுக் கவனத்துடன் வாகனத்தை இயக்கவேண்டும். அனுமதிக்கப்பட்ட வேக அளவை விட அதிகமான வேகத்திலோ, மது அருந்தியோ, கைப்பேசியை உபயோகித்துக்கொண்டோ வாகனத்தை இயக்குவதை தவிர்க்கவேண்டும்.

சாலையில் பயணிக்கும்போது எதிரில் பிற வாகனங்கள் எதுவும் வரவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே நமக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்லவேண்டும். களைப்பு, உறக்கம், சோர்வு ஏற்படும் நேரங்களில் வாகனத்தை இயக்கக்கூடாது. நாம் செல்லும் வாகனத்தின் வேகத்தைப் பொறுத்து நமக்கு முன்னே செல்லும் வாகனத்திற்கும் நமக்குமான இடைவெளியை உறுதி செய்யவேண்டும். வாகனம் ஓட்டும்போது பிறருடன் பேசிக்கொண்டே இயக்கக்கூடாது.

வாகன ஓட்டுநர்களை நம்பி ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்வதால் அவர்களின் உயிர் பாதுகாப்பு அனைத்தும் ஓட்டுநர்களை நம்பியே உள்ளது என்பதை ஓட்டுநர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். சாலையில் பயணிக்கும்போது நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளை பார்த்து அதற்கு தகுந்தவாறு வாகனத்தை இயக்கவேண்டும். விபத்தினை தவிர்த்திட ஒரு இடத்திற்கு வாகனத்தில் செல்லும்போது குறித்த நேரத்திற்கு முன்னரே அவ்விடத்திலிருந்து கிளம்பி, சீரான வேகத்தில் சென்று சரியான நேரத்தில் சேரவேண்டிய இடத்தை அடையலாம். வாகன ஓட்டுநர்கள் முறையாக அரசு விதிகளை கடைபிடிப்பதன் மூலம் விபத்தில்லா சாலை போக்குவரத்து சாத்தியமாகும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்து, போக்குவரத்து விதிகள் குறித்த துண்டு பிரசுரங்கள், ஒட்டுவில்லைகள், விழிப்புணா;வு வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பதாகைகளை வழங்கியும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா;வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.

பின்னர், புதிய பேருந்து நிலையத்தில், பொதுமக்களின் வசதிக்காக நகராட்சியின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகளையும், கழிப்பிட வசதிகளையும், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை நல்ல முறையில் செய்திட அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் செல்வக்குமார், நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், வட்டாட்சியர் அருளானந்தம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!