Awareness for women’s education is conducted in Perambalur.
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பெண் கல்வி முக்கியத்துவம், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், சுத்தம் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 362 அனைத்து அரசு தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பு உண்டு உறைவிடப் பயிற்சி பள்ளிகள் மற்றும் முபுடீஏ பள்ளிகளில் 1 வகுப்பு முதல் 8 ம் வகுப்புபயிலும் மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இதனடிப்படையில் 1 முதல் 3 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஓவியப் போட்டியும், 4 மற்றும் 5 ஆம் வகுப்புபயிலும் மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டியும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரைபயிலும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
இப்போட்டிகள் இன்று முதல் பள்ளி அளவிலும், 10.11.2017 அன்று 10 முதல் 1 மணி வரை வட்டார அளவிலும், 14.11.2017 அன்று 10 முதல் 1 மணி வரை பெரம்பலூர் வட்டார வளமையத்தில் மாவட்ட அளவிலும் நடைபெற உள்ளது, என தெரிவித்துள்ளார்.