Awareness play on violence against girls on behalf of Perambalur Legal Services Committee!
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்திடவும், சட்ட பாதுகாப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும் தெருமுனை நாடக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி லதா தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் குன்னத்தில் நடைபெற்றது.
திருச்சி கலைக் காவிரி கல்லூரி பேராசிரியர் சதீஸ்குமார் ஒருங்கிணைப்பில் இசை மற்றும் நடனம் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் தெரு நாடகத்தின் மூலம் பெண் கல்வியின் அவசியத்தையும், குழந்தைத் திருமணத்தினை தடுத்திடவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு குறித்தும், பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளின் சட்ட வழிகள் குறித்த வழிமுறையினையும், கதைகள் மூலமாகவும், நாடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர் முனிக்குமார் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் சிவகாமசுந்தரி, காவல் துறையினர்கள். வழக்கறிஞர்கள் சங்கர் மற்றும் ராமசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.