Awareness Seminar on Farmers’ Compost, Pesticide Sprinkler and Plant Protection

model-impropper

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் பருத்தி பயிரானது சுமார் 83 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு விவசாயிகள் தற்பொழுது பயிர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் குன்னம் வட்டாரத்தில் பூச்சி மருந்து தெளிக்கும் போது அனுபவம் இல்லாத காரணத்தால் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் நடைபெறா வண்ணம் தவிர்க்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்க உத்தரவிட்டதன் பேரில் வேளாண்மை துறை, ரோவர் வேளாண் அறிவியல் நிலையம், ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் பேயர் பூச்சி மருந்து உற்பத்தி நிறுவனம் இவைகளின் கூட்டு முயற்சியில் 10.11.2017 அன்று பெரம்பலூரில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் பெரம்பலூர் அஸ்வின் உணவக கூட்ட அரங்கில நடத்தப்பட உள்ளது. இக்கருத்தரங்கில் சுமார் 100 விவசாயிகளுக்கு பூச்சிமருந்து தெளிக்கும்போது பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 14.11.2017 அன்று தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம், வேளாண்மை துறை, பருத்தி ஆராய்ச்சி நிலையம், வேப்பந்தட்டை மற்றும் ராசி விதைகள் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் பெரம்பலுhhpல் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் நலனை கருத்திற்கொண்டு இந்த இரண்டு கருத்தரங்குகள் நடைபெற வழிவகை செய்துள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும்.

உரிய வழிகாட்டுதல் இன்றி பூச்சி மருந்துகளை கையாளக்கூடாது. பூச்சி மருந்து தெளிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடத்திலோ, வேளாண்மை அலுவலர்களிடத்திலோ கேட்டறியலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!