Banana tree with wreathe welcome to DMK candidate Sivasankar from Kunnam constituency who came to collect votes

குன்னம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கர் வேப்பூர் ஒன்றியத்தில் இன்று காலை வாக்குகள் சேகரித்தார்! ஒன்றியத்தில் உள்ள பனங்கூர், மருவத்தூர், பேரளி மற்றும் வேப்பூர், கல்லை, ஓலைப்பாடி, காரைப்பாடி, ஆகிய ஊர்களில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினருடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, வீதி, வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.


மருவத்தூரில், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு வெடிகள் முழங்க மேளதாளத்துடன் ஒலிக்க, தெருக்களில் வாழை மரம், தோரணம், வண்ண பலூன்கள் அழகுற கட்டி வைத்திருந்தனர். அப்போது கிராமத்து பெண்கள் உற்சாகத்துடன் திரண்டு வந்து ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். கிராம பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் ரோஜாப்பூ மாலை அணிவித்து வேட்பாளருக்கு மரியாதை கொடுத்தனர். வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் இளம்பெண்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கர் பேசுகையில், கடந்த தி.மு.க.ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்ளை எடுத்து கூறினார். தன்னை உதயசூரியன் சின்னத்தில் அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால், மருவத்தூர் உள்ளிட்ட குன்னம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் நல்ல திட்டங்களை கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்தார். அதோடு, திமுகவின் தேர்தல் அறிக்கைகள் துண்டு பிரசுரங்களாக வினியோகம் செய்தனர்.

மாவட்ட கழகச் செயலாளர் – மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், பொறியாளர் பரமேஸ்குமார், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா. துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்விராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், மாவட்ட இளைஞரணி துனை அமைப்பாளர் ஏ.எம்.கே. கரிகாலன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் – மாவட்ட கவுன்சிலர் டாக்டர் அ.கருணாநிதி, வேப்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, அமுதா ஸ்டோர் அன்பழகன், வினாயகா டிராவல்ஸ் ராஜூ,
ஒதியம் ஊராட்சி மன்றத் தலைவர் வைத்தியநாதன், உள்ளிட்ட ஒன்றிய, பேரூர் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!