bankers provide speedy to Pensions, loans, ordered perambalur district collector

பெரம்பலூர் மாவட்ட அளவிலான வங்கியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அரசாங்க நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு வங்கியாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் விரைவில் சென்றடைய வங்கிகள் துரிதமாக செயல்பட வேண்டும். மேலும், முதியோர் உதவித் தொகை வங்கியின் வணிக சேவையாளர்கள் மூலம் குறித்தநேரத்தில் வழங்க வேண்டும்.

சுய உதவி குழுக்களுக்கான கடன்களை தகுதியின் அடிப்படையில் கடனளித்து பெண்களின் பொருளாதார மேம்பாடு உயர வழிவகை செய்யவேண்டும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன்களை அதிக அளவில் அளிக்கவேண்டும். மேலும் பிரதம மந்திரி முத்ரா திட்ட கடன்கள், ஸ்டேண்ட் அப் இந்தியா மற்றும் பயிர் காப்பீடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அதிக பயனாளிகள் பயன் அடைய செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அனைத்து வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து இக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மற்றும் அரசாங்க துறைகள் மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ சார்ந்த கடன் திட்டங்களின் நிலைபாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் அனைத்து வங்கியாளர்கள், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!