behalf of the amma peravai of the late Chief Minister Jayalalithaa mourned
அம்மா பேரவை சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம் : 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் நான்கு ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் அம்மாபேரவை சார்பில் மறைந்த முதலமைச்சருக்கு இரங்கல் கூட்டம் நடந்தது, அதில் அதிமுவை சேர்ந்த 3 அமைச்சர்களான , வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர்.ராஜு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைவால் வாடும் தொண்டர்களுக்கும், பொதுமக்களும் ஆறுதல் கூறுவது, சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவச் சிலை திறப்பது, ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் கட்டுவது, உயரிய விருதா பாரத ரத்னா விருதிற்கு ஜெயலலிதாவின் பெயரை பரிந்துரை செய்வது, மற்றும் சின்னாம்மாவை(சசிகலா நடராஜன்) கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அம்மா பேரவை தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாதாக மவுன அஞ்சலியும், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.