Bihar young woman from Perambalur near Suspect death after being hanged
பெரம்பலூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வரும் பீகார் மாநிலம், பாங்கா மாவட்டம், பாகுமாரா கிராமத்தை சேர்ந்த பிலிப்தாஸ் மனைவி புஷ்பாகுமாரி (வயது 17), அதே பகுதியிலுள்ள எறையசமுத்திரம் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது வாடகை வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த இரண்டரை வருடத்திற்கு முன்னர் திருமணமான நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்னர் பிலிப்தாஸ் தனது மனைவி புஷ்பாகுமாரியை எறையசமுத்திரம் கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
குழந்தைகள் ஏதும் இல்லை, மனைவியின் நடத்தையில் பிலிப்தாஸ் சந்தேகப்பட்டதால் கனவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து 10.30 மணிக்கு வீட்டிற்கு சென்று பார்த்த போது புஷ்பாகுமாரி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
பதட்டத்தில் செய்வது அறியாமல் இரவு முழுவதும் சடலத்துடன் தங்கியிருந்த பிலிப்தாஸ், இன்று காலை போலீசுக்கு அளித்த தகவலின் பேரில் மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பாகுமாரியின் உடலைக்கைப்பற்றி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் மேலும், புஷ்பகுமாரி கணவர் பிலிப்தாஸிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.