blocking the struggle of the truck was loaded with cow herd for meat

பெரம்பலூர் வழியாக அடிமாட்டிற்காக லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட 40 நாட்டு மாடுகளை பிடித்து தமிழின உணர்வாளர்கள் நள்ளிரவில் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு தடை நீக்க கோரியும், பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும், போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 4வது நாளாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தி வரும் தமிழ் இன உணர்வாளர்கள் இன்று அவ்வழியாக லாரிகளில் கொண்டு வரப்பட்ட 40 நாட்டு மாடுகள் அடிமாடாக எடுத்து சென்றதை மறித்தனர். பின்னர், சிறைப்பிடித்த அவர்கள் லாரியை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தவர்கள் ஏன் இந்த நாட்டு மாடுகள் அடிமாடாக போவதை தடுக்க வில்லை என போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த அங்கு வந்த காவல்துறையினர் தமிழின உணர்வாளர்களை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் லாரியை விடுவித்தனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பே நடந்த இந்த சம்பவத்தால் அங்கிருந்த பயணிகள், பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!