Breaking the lock of the house in broad daylight near Perambalur and robbing money!
பெரம்பலூர் மாவட்டம், பசும்பலூர் பால் குளிரூட்டும் நிலையம் எதிரில் வசித்து வருபவர் முத்துசாமி (வயது 55). விவசாயியான இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வயலுக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் அருகில் இருந்த இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.10 ஆயிரம் மொத்தம் 22 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக முத்துசாமி வி.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2 மாதத்தில் பசும்பலூரில் நடைபெற்ற 3 வது கொள்ளை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.