பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1 லட்சத்து 78 ஆயிரத்தை பறக்கும் படை அலுவலர்களால் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்மன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர்ந்து வாகனச் சோதனையிலலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 9 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரிலிருந்து ஊட்டத்தூர் செல்லும் சாலையில் பழனிசெல்வம் தலைமையில் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருச்சி மாவட்டம், லால்குடி தெரணிபாளையத்தில் வசிக்கும் சின்னசாமி மகன் பெரியசாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்தை ரொக்கமாக கொண்டு வந்துள்ளார். அதனை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.