Buses not running: Public suffering; Unions strike to condemn federal government
பெரம்பலூர் மாவட்டத்தில், மத்திய அரசின் தனியார் மைய கொள்கையை கண்டித்து இன்று தொழிற்சங்கங்கள் நடத்தும் பொது வேலைநிறுத்தத்தால், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் பள்ளி – கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். பெரம்பலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இன்று காலை முதலே ஒரு பேருந்து கூட இயக்கப்படவில்லை. பெரம்பலூர் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் அரசு பேருந்துகள் வரததால் குறைந்த அளவு தனியார் பேருந்துகளே இயக்கப்பட்டன.
சென்னை, திருப்பதி, வேலூர், கடலூர், புதுச்சேரி, சேலம், கோவை, தஞ்சை, நாகை போன்ற நெடுந்தூரம் செல்லும் பயணிகள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். திருச்சி, அரியலூர், துறையூர்,திட்டக்குடி, ஆத்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மட்டும் தனியார் பேருந்துகளில் பயணித்தனர். இதனால், பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் பணிக்கு சென்றனர். மேலும், பேருந்து நிலையங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து பாதிப்படைந்ததால், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு மக்கள் அதிக அளவில் வரவில்லை. போக்குவரத்திற்கு பேருந்துகளை மட்டுமே நம்பி இருந்தவர்கள் நிலைமை இன்று அவர்களது நிலைமை பெரும் சிரமமாக இருந்தது.