Business seminar at Namakkal Government Women’s College
நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.
நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் வணிகவியல் பட்டதாரிகள் வாழ்க்கைக்கான வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுகுணா வரவேற்றார். வணிகவியல் மூன்றாமாண்டு மாணவி ரஞ்சிதா வரவேற்றார்.
வணிகவியல் துறை தலைவர் சுபத்ரா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்தார். விழாவில் சேலம் சுவுடேஸ்வரி கல்லூரி வணிகவியல் துறை இணை பேராசிரியர் (ஓய்வு) முத்துராஜ் பங்கேற்று இன்றைய காலகட்டத்தில் வணிகவியல் பட்டதாரிகளுக்கு வாழ்வியல் வாய்ப்புகள் என்ற தலைப்பில் பேசினார்.
முதுகலை முதலாமாண்டு மாணவி கவுரி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை வணிகவியல் மன்ற நிர்வாகிகளும் மற்றும் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.