Campus interview for educated women and youth will be held in Perambalur tomorrow.


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

கிராம தூய்மை மற்றும் கிராம நலவாழ்வு இருவார இயக்கத்தினை ஒட்டி பெரம்பலூh; மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மாவட்ட அளவிலான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 14.10.2017 (நாளை) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மூலம் சென்னை, திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், பெரம்பலூர் போன்ற பெருநகரங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்தநேர்க்காணலில் 8 ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, பொறியியல், இளங்கலை மற்றும் முதுகலை வரை படித்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள 18 முதல் 35 வயது வரையுள்ள இளைஞர;கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், குடும்ப அட்டையின் நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கலந்துகொண்டு, வேலைவாய்பற்ற இளைஞர்கள் பயன்பெறலாம்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!