Candidate Introduction Meeting for the BJP-led NDA Alliance’s Perambalur Constituency Candidate!

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சுப்ரமணியம் மஹாலில் இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. பெரம்பலூர் தனித் தொகுதியில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. வேட்பாளராக முன்னாள் பெரம்பலூர் தொகுதி எம்எல்.ஏவும், பெரம்பலூர் அஇஅதிமுக மாவட்ட செயலாளருமான எளம்பலூரை சேர்ந்த இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த அதன் அறிமுக விழாவில், சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் சூளுரைத்தனர்.
இந்த கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன், பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தமாக மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் மற்றும் ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், அதிமுக அவைத் தலைவர் குன்னம் சி.குணசீலன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் ஆ.அருணாசலம், முன்னாள் எம்.பி-க்கள் சந்திரகாசி, மருதைராஜா, முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வமணி, ஏ.கே. ராஜேந்திரன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளை சேர்ந்தவர்கள் என தேஜ கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் திராளனோர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497